குழந்தைகள் வளர்ப்பில் அலட்சியம்; முன்னாள் குழந்தை பராமரிப்பாளருக்கு RM40,000 அபராதம்

ஜோகூர் பாரு ஆகஸ்ட்டு 15,:

தாமான் முத்தியாரா ரினியில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் இரண்டு குழந்தைகளுக்கு உடல் காயத்தை ஏற்படுத்தியது, மற்றும் அலட்சியமாக செயல்பட்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக, ஒரு முன்னாள் குழந்தை பராமரிப்பாளருக்கு RM40,000 அபராதம் விதித்து, நீதிமன்றம்,  இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15)  தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட, நூருல் ஷாஹிரா அஷிகின் சுலைமான், 28, அவர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM20,000 உத்தரவாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நன்னடத்தையின் பத்திரம் பெறவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் தண்டனை வழங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அவர் 100 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி டத்தோ சே வான் ஜைதி சே வான் இப்ராகிம் உத்தரவிட்டார். 

கடந்த மே 21 அன்று, 11 மாத பெண் குழந்தைக்கும் ஒன்பது மாத ஆண் குழந்தைக்கும் உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தக்கூடிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

மார்ச் மாதம் மதியம் 1 மணிக்கு இங்குள்ள தாமான் முத்தியாரா றினி, ஜாலான் உத்தாமா 34 இல் இந்த குற்றம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here