பிரேசிலிய காற்பந்து வீரர் நேய்மாரைச் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணிக்கு 90 மில்லியன் யூரோவிற்கு விற்க PSG ஒப்புக்கொண்டுள்ளது.
ஒப்பந்தம் நிறைவேற 31 வயது நேய்மார் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று BBC செய்தி நிறுவனம் சொன்னது.
அவர் 2017ஆம் ஆண்டு 222 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் PSG அணியில் சேர்ந்தார்.அதற்கு முன்பு அவர் பார்சலோனா அணியில் இருந்தார்.அந்த நேரத்தில் அவர் PSG அணிக்காக 173 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.
மேலும் 13 வெற்றிக்கிண்ணங்களை வெல்ல உதவியிருக்கிறார்.
எனினும் PSG அணியுடனான நேய்மாரின் பயணம் கணுக்கால் காயங்களால் தடைபட்டது.
அவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் கணுக்காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார்.
அதையடுத்து இந்தக் காற்பந்துப் பருவத்தின் பெரும்பகுதி அவர் விளையாடவில்லை.
சென்ற மாதம்தான் நேய்மார் மீண்டும் காற்பந்துப் பயிற்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















