RM232.5 மில்லியன் ஊழலுடன் சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து முஹிடின் விடுவித்து விடுதலை

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 15:

ரிங்கிட் 232.5 மில்லியன் ஊழலுடன் சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து, முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை உச்சநீதிமன்றம் இன்று விடுவித்து, விடுதலை செய்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்றும் தெளிவற்றவை என்றும், இந்த குற்றச்ச்சாட்டுகளில் நீதிமன்றம் திருப்தி அடையாததை அடுத்து, நீதிபதி முஹமட் ஜமில் ஹுசின், இவ்வழக்கிலிருந்து பெர்சாத்து தலைவரை விடுவித்து, விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்யுமாறு முஹிடின் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட, நீதிமன்றம் இவ்வழக்கில் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here