அடையாள அட்டை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் 20 புகார்களை பதிவுசெய்தது பினாங்கு போலீஸ்

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட்டு 16:

கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த மாநில தேர்தலில், அடையாள அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பினாங்கு காவல்துறைக்கு 20 புகார்கள் கிடைத்துள்ளதாக, பினாங்கு காவல்துறைத் தலைவர், டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

சனிக்கிழமையன்று 20 நபர்களின் அடையாள அட்டைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டதால், அவர்கள் மறுபடியும் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் (EC) அனுமதிக்கப்படவில்லை.

எனவே குறித்த சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் குற்றச் சட்டம் 1954ன் பிரிவு 7ன் கீழ், போலீசார் மொத்தம் 20 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், ஜூலை 29 முதல் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும், பினாங்கு காவல்துறை பல்வேறு குற்றங்கள் சம்பந்தப்பட்ட 87 புகார்களைப் பெற்றதாகவும் காவ் நேற்று நடந்த ஓர் று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here