நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திரயான் விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது. சுமார் 100 கி.மீட்டர் உயரத்தில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான் 3 தரையிறங்க உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவும் லுனா 25 என்ற விண்கலத்தை நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் கடந்த 11 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வெறும் 5 நாட்களில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லுனா 25 விண்கலம் நுழைந்துள்ளது. வரும் 21 ஆம் தேதி இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here