2-ஆவது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் 500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ஜெயிலர் திரைப்பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில் முதல் வாரம் ஜெயிலர் உலகம் முழுவதும் 375 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை. இரண்டாவது வாரத்திலும் வசூலை அள்ளுகிறது. தமிழகத்தில் எட்டு நாட்களில் 235 கோடி வசூலித்து உள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. ஜெயிலரின் இந்த ஆட்டம் இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என கூறப்பட்டு உள்ளது. 2-ஆவது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் 500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது.




















