மின் கம்பத்தில் மோதிய கார்; இருவர் பலி – ஒருவர் படுகாயம்

ஈப்போ: ஜாலான் கோல கங்சார் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகாலை 2.15 மணியளவில்  கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்தார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி சைபுல் ரிசான் சுலைமான் கூறுகையில், இறந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் அறிவித்தனர்.

அதிகாலை 2.25 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, ​​இடிபாடுகளில் மூன்று பேர் சிக்கியிருப்பதைக் கண்டோம். காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா பெர்மைசூரி பைனுன் ஹோஸ்பிதாவுக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவரும் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்று அவர் மேலும் கூறினார். மீட்பு பணி அதிகாலை 4.30 மணிக்கு முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here