எல்மினா விமான விபத்து: விமானத்தின் CVR ஆய்வுக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டது

புத்ராஜெயா, ஆகஸ்ட்டு 21:

கடந்த வியாழன் அன்று ஷா ஆலாமில் பண்டார் எல்மினா அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியிலுள்ள குரல் ரெக்கார்டர் (CVR ) ஆய்வுக்காக சிங்கப்பூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

மலேசிய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) எரிந்த CVR-ல் இருந்து தரவை மீட்டெடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், கருப்பு பெட்டி மோசமாக சேதமடைந்திருந்தாலும், “மெமரி பேக்” இன்னும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விபத்து நிகழும் முன், கைப்பற்றப்பட்ட “மெமரி பேக்கில்” இறுதி 30 நிமிட குரல் பதிவின் தரவை சிங்கப்பூரில் உள்ள வல்லுநர்கள் மீட்டெடுப்பார்கள் என்று அவர் கூறினார்.

“தரவை மீட்டெடுப்பதற்கான உபகரணங்கள் எங்களிடம் இல்லாததால், “மெமரி பேக்” சிங்கப்பூருக்கு நேற்று அனுப்பப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here