அரசு ஊழியர்கள் இனி வியாழக்கிழமைகளில் பாத்தேக் உடை அணிய வேண்டும்

புத்ராஜெயா:

அரசு ஊழியர்கள் அனைவரும் வியாழக்கிழமை தோறும் கட்டாயமாக பாத்திக் உடை அணிய வேண்டும் என்று, பொது சேவை ஊழியர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

பொது சேவை ஊழியர் ஆணையகத்தின் அதிகாரப்பூர்வ facebook தளத்தில் வெளியாகியுள்ள குறித்த அறிக்கையில், கூட்டரசு பணியாளர்கள் பணி நேரத்தில் பாத்தேக் உடைகளை அணிய வேண்டும் என்றும், உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு பாத்தேக் அணிவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆடைக் குறியீட்டு விதிமுறைகள் அடங்கிய பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1985-ஆம் ஆண்டு முதல் பொது சேவைத்துறை அதிகாரிகளால் பாத்தேக் உடை அணியப்படுகிறது. இதனால் நமது நாட்டின் பாத்திக் தொழிற்துறைக்கு உறுதியான ஆதரவு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த ஆடைக்குறியீடு நேற்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here