கூச்சாய் லாமாவில் கூரை இடிந்து விழுந்த வாகன உரிமையாளர்களுக்கு மாமன்னர் உதவி தொகையை வழங்கினார்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, சமீபத்தில்  ஜாலான் கூச்சாய் லாமாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட உதவித்தொகையை  வழங்கினார். இஸ்தானா நெகாராவின் முகநூல் பதிவின்படி, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நடைபெற்ற நிகழ்ச்சியில், நன்கொடைகளை அவரது மாட்சிமையின் மூத்த தனிச் செயலாளர் டத்தோ நாசிம் முகமட் ஆலிம் வழங்கினார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் ஷுகோர், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் மற்றும் மாமன்னரின் உதவியாளர் எஸ்ஏசி முகமட் அசானி ஓமர் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த சம்பவத்தில், ஸ்ரீ டேசா கூச்சாய் கட்டிடத்தின் ஏ பிளாக் கூரையின் பீம் அமைப்பு இடிந்து விழுந்ததில் 10 வாகனங்கள் மோசமாக சேதமடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here