பிரதமரை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் பதிவு; போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படும் பேஸ்புக் கணக்கின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 18 அன்று அவர் வெளியிட்ட ஒரு அவதூறான வீடியோவைத் தொடர்ந்து, பேஸ்புக் கணக்கின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜெய்ன் கூறினார்.

“பேஸ்புக் கணக்கின் உரிமையாளர், வாக்குமூலம் பெறுவதற்காக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டார் என்றும், இந்த வழக்கு “சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்னும் விசாரணைக் கட்டத்தில் இருப்பதாக கூறிய முகமட் ஷுஹைலி, இந்த செயல்முறையை சீர்குலைக்கும் அல்லது சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு ஊகங்களையும் அல்லது தவறான தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here