ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது; 12 இந்திய பிரஜைகள் மீட்பு

கோலாலம்பூர்:

சரவாக்கில் ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் 12 இந்திய பிரஜைகள் குடிநுழைவுத் துறையால் மீட்கப்பட்டனர்.

அதேநேரத்தில், ஆகஸ்ட் 19 முதல் 22 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆட்கடத்தல் கும்பல் உறுப்பினர்களுடன் டட்லி என்று அழைக்கப்படும், குறித்த கும்பலின் மூளையாக அறியப்பட்ட 40 வயதான உள்ளூர் நபர் ஒருவறையும் தாம் கைது செய்யததாக குடிநுழைவு இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார். .

“இதான் மூலம் பாதிக்கப்பட்ட 12 ஆண் இந்திய பிரஜைகளை நாங்கள் காப்பாற்ற முடிந்தது என்றார்.

“ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் மலேசியாவுக்குள் நுழைவதற்கு குறித்த கும்பலுக்கு RM20,000 முதல் RM25,000 வரை செலுத்தியதாக ” அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியீட்டுக்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தக் கும்பல் கடந்த ஆண்டு மே மாதம் செயல்பட்டு வருகிறது.

அவர்களிடமிருந்து 600 ரிங்கிட் ரொக்கம், 75 இந்திய கடவுச்சீட்டுகள், ஏழு இந்தோனேசிய கடவுச்சீட்டுகள், மூன்று மியான்மர் கடவுச்சீட்டுகள், நான்கு மடிக்கணினிகள் மற்றும் மூன்று வாகனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ரஸ்லின் கூறினார்.

“கும்பலின் மூளையாக செயற்பட்டவர் உடன்பட ஐவருக்கு ஒரு வாரம் தடுப்புக்காவல் உத்தரவும், மேலும் அனைத்து இந்திய பிரஜைகளும், செமுஜா குடிவரவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று ரஸ்லின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here