உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.
இதில் 35 கிலோமீட்டர் நடைபோட்டியில் ஸ்லோவாக்கிய வீராங்கனையான ஹனா புர்சலோவா கலந்துகொண்டார். ஹனா புர்சலோவா பந்தய தூரத்தை கடந்தபோது, சக நாட்டு தடகள வீரரான டொமினிக் செர்னி, தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார்.
டொமினிக் சென்னி காதலை வெளிப்படுத்தியபோது, மகிழ்ச்சியடைந்த ஹனா புர்சலோவா, காதலை ஏற்றுக்கொண்டார். அப்போது டொமினிக், தான் வைத்திருந்த மோதிரத்தை ஹனா புர்சலோவாவுக்கு அணிவித்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து, இருவரும் ஒருவருக்கொருவர் முத்தங்களை பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.