2023 கிரிக்கெட் உலகக் கோப்பையை பாரிசில் அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா!

பாரீஸ்:

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், 2023 கிரிக்கெட் உலகக்கோப்பையை பாரிசில் அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா.

இதன் மூலம் இந்த கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றார் நடிகை மீனா.

தனது இன்ஸ்டாகிராமில் அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட கோப்பையுடன் நடிகை மீனா நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here