பொந்தியான்:
தஞ்சோங் பியாயில் போதைப்பொருள் விநியோகம் செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 30 மற்றும் 32 வயதுடைய இருவரும், ஒரு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள சியாபு என நம்பப்படும் பதப்படுத்தப்பட்ட 3 கிலோ துண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் கடல்சார் அமலாக்க பிரிவின் இயக்குனர், First Admiral Maritime நூருல் ஹிசாம் ஜகாரியா தெரிவித்தார்.
“சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அதிகாலை 2 மணியளவில் தஞ்சோங் பியாயின் சுங்கை பெலுகாங் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர் என்றும், “இருவரும் போதைப்பொருட்களை விநியோகிப்பதற்காக கோலாலம்பூரில் இருந்து தஞ்சோங் பியாவிற்கு வாகனம் ஓட்டி வந்ததையும் ஒப்புக்கொண்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் கூறினார்.
மேலும் சந்தேக நபர்களின் கனத்திற்குள் சோதனை செய்ததில் 10,000 ரிங்கிட் பணமும் கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.








