கோலாலம்பூர்:
ஸ்தாப்பாக் சொகுசுமாடிக் குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து, சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு 8.20 மணியளவில், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக, வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைவர், அஷாரி அபு சாமா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குறித்த சொகுசுமாடிக் குடியிருப்பின் பிளாக் B பகுதியில், தரையில் பாதிக்கப்பட்ட 14 வயது வெளிநாட்டு சிறுமியின் உடலைக் கண்டெடுத்தனர்.
“உயிரிழந்த சிறுமி அவரது தாய் மற்றும் சகோதரியுடன் எட்டு ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்தார் என்றும், அதே நேரத்தில் அவரது தந்தை தற்போது வங்காளதேசத்தில் இருக்கிறார்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
விசாரணையில், பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்து, இறந்தது கண்டறியப்பட்டது. என்றும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.










