கேக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடி ; மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

இஸ்கண்டார் புத்திரி:

ன்று கொண்டாடப்பட்ட நாட்டின் 66வது தேசிய தினத்துடன் இணைந்து, கேக்கில் செய்யப்பட்ட மலேசிய தேசியக்கொடி மலேசியா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

முற்றிலும் சைவத்தினாலான இந்தக் கேக் ஜோகூர் சுற்றுலா மற்றும் மாநிலத்தில் உள்ள பல ஹோட்டல்களைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் மற்றும் மலேசிய சமையல் மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் செய்யப்பட்டதாக பிரபல மலேசிய சமையல்கலை நிபுணர் மைக்கேல் ஓய் பெங் ஹாக் கூறினார்.

இது 750 கிலோகிராம் எடையும், ஒன்பது அடி நீளமும் (2.7 மீட்டர் அல்லது மீ) ஐந்தடி 1.5 மீ அகலமும் கொண்டது என்றும் இக்கேக்கைத் தயாரிக்க 48 மணிநேரம் எடுத்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் இன்று பிற்பகல் புத்திரி துறைமுகத்தில் நடந்த 2023 Majestic Johor Festival (MJF) விழாவில் இந்த கேக் வைக்கப்பட்டது. மேலும் இந்தக் கேக் வெட்டும் அமர்வில் ஜோகூர் சுற்றுலா இயக்குனர் சுஹைரி ஹாஷிம், கோத்தா இஸ்கந்தர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பாண்டேக் அகமட் மற்றும் ஸ்டார் வென்டர்ஸ் ஈவென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ சரிபா ரசியா முஸ்தபா அல்லது இஃபா ரசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு MJF- நிகழ்விற்கு வருபவர்களுக்கு கேக் இலவசமாக விநியோகிக்கப்பட்டது என்றும் ஓய் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here