ரானாவில் மாணவர் பகடி வதை; போலீஸ் விசாரணை ஆரம்பம்

ரானாவ்:

ரானாவ் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நடந்ததாகக் நம்பப்படும் மாணவர் பகடிவதை சம்பவத்தைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் இன்று வைரலானதைத் தொடர்ந்து, அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் 3.26 மணிக்கு காவல்துறையினருக்கு புகார் கிடைத்ததாக ரானாவ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் சிமியுன் லோமுடின் தெரிவித்தார்.

“இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும், இதுவரை வழக்கு விரிவான விசாரணையில் உள்ளது. “எனவே இந்த வீடியோ தொடர்பாக எந்தவித ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவுமாறும், ரானாவ் IPD க்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை வலியுறுத்துவதாக சிமியுன் கூறினார்.

முன்னதாக, 5 நிமிடங்கள் 33 வினாடிகள் கொண்ட வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் வெளியான வீடியோவில், பல மாணவர்களின் பகடிவதை அல்லது கொடுமைப்படுத்தும் செயல்களைக் காட்டியது.

குறித்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் ஆத்திரத்தை கிளப்பிவிட்டுள்ளதுடன், அவர்கள் செயலைக் கண்டித்ததோடு, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here