சார்ஜ் செய்யும்போது வெடித்த கைத்தொலைபேசி; அதிஷ்டவசமாக உயிர்தப்பினார் வாலிபர்

கூலிம்:

தூங்கும் முன்னர் படுக்கையில் கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு படுத்த வாலிபர், காலையில் புகை மூட்டத்திலுள்ள அறையிலிருந்து மூச்சு திணறி வெளியேறியது தொடர்பிலான டிக் டாக் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை நடந்த சம்பவத்தில், முஹமட் இர்பான் அய்மான் முகமட் சோப்ரி என்ற 16 வயது வாலிபர் “சார்ச் போட்டிருந்த தனது கைத்தொலைபேசி வெடித்ததால் உயிர் பிழைத்ததாக, அவரது சகோதரி, நுரைன் நஜிஹா முகமட் சோப்ரி என்பவர் டிக்டாக்கில் பதிவேற்றிய வீடியோவில்” பகிர்ந்து கொண்டார்.

“சம்பவத்தன்று குறித்த இளைஞர் படுக்கையில் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, கீழே தூங்கியதாகவும், அவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால், தனது மொபைல் போன் வெடித்ததை காலை 5 மணி வரை என்ன நடந்தது என்று தனது அக்கா எழுப்பும் வரை எனக்கு புரியவில்லை” என்று அவர் கூறினார்.

​​”அந்த நேரத்தில், அறை முழுவதும் புகையால் நிரம்பியிருந்ததால், என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், மூச்சுத் திணறலைத் தவிர்க்கவும் நான் உடனடியாக வெளியே சென்றேன்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தால் பெரிய தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் , ஆனால் இனிமேல் தூங்கும் போது கைத்தொலைபேசியை சார்ஜ் பண்ணவே மாட்டேன், என்றும் இந்த சம்பவம் நடந்தது எனக்கு நல்ல பாடத்தை கற்றுத்தந்துள்ளது” என்றார்.

இந்த வீடியோ 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here