லங்காவி:
லங்காவி நெடுஞ்சாலையில் நேற்று பல்நோக்கு வாகனம் மோதிய விபத்தில், பலத்த காயமடைந்த இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட வாகனத்தில் பயணித்த இரு 18 வயது இளைஞர்களில் முஹமட் ஃபிஸ் ரஸ்வைல் ஜைனுதீன் என்பவர் நேற்றிரவு 10.53 மணிக்கு இறந்தார், அதே நேரத்தில் முஹமட் ஹைகல் ஹக்கிம் சே இசா, இன்று காலை 8.59 மணிக்கு இறந்ததாக, லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.
“உயிரிழந்த இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் சுல்தானா மலிஹா மருத்துவமனையின் (HSM) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.” என்று அவர் கூறினார்.
பலத்த காயங்கள் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் இருவரும் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஷரிமான் கூறினார்.
இருவரது உடல்களும் குடும்பத்தாரால் உரிமை கோரப்பட்டு, அடக்கம் செய்வதற்காக வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அறியமுடிகிறது.
நேற்றைய தினம், நான்கு இளைஞர்கள் சென்ற பல்நோக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுடன்,ஓட்டுநர் உட்பட இருவர் லேசான காயமடைந்துள்ளதாக முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 43(1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.








