மூவார்:
மூவார் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் KM144.4 இல் இன்று மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு மாதக் குழந்தை மற்றும் ஒரு ஆடவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 3.10 மணியளவில் ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மூவார் மாவட்ட காவல்துறை தலைவர், ACP ரைஸ் முக்ஹலிஸ் அஸ்மான் அஜிஸ் தெரிவித்தார்.
சாம்பல் நிற ஹோண்டா மோட்டார் சைக்கிள் சறுக்கி சாலையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், முதல் மோட்டார் சைக்கிளை தவிர்க்க முற்பட்ட போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் வலது பக்கம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் “அதே திசையில் பயணித்த கார் ஒன்று சாலையில் கிடந்த முதல் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது “என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் மூவாரில் உள்ள பகார் சுல்தானா ஃபாத்திமா (HPSF) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காரில் இருந்த ஆண் குழந்தை ஒன்று மாற்றும் 20 வயதுடைய முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட மற்ற ஐந்து பேர் HPSF இல் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இந்த விபத்தை நேரில் கண்ட எவரும் விசாரணையில் உதவ அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு ” அவர் கேட்டுக்கொண்டார்.









