மூன்று துறைகளுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஒப்புதல் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்- மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்:

ந்தியர்களின் பாரம்பரிய தொழில்களான முடிதிருத்துதல், ஜவுளி மற்றும் பொற்கொல்லர் ஆகிய துறைகளில் ஆட்சேர்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை (செப். 8) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான விஷயங்கள் இருந்தால், இந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நான் அவற்றை முறையாக அறிவிப்பேன் என்று மனிதவள மேம்பாட்டுக் கழகத்தால் (HRD Corp) தின் தேசிய பயிற்சி குறியீட்டை (NTI) அறிமுகப்படுத்திய பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு முதல் புதிய வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்க மூன்று துணைத் துறைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here