திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா-முன்பதிவுக்கு முந்துங்கள்

TTDC DIRECTOR

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத் திட்டம் -1 ல் சென்னைவாலாஜா சாலை சுற் றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக் கேணிஅருள்மிகு பார்த்தசாரதி கோவில் திருக்கோவில், பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி கோவில்திருக்கோவில், திரு விடந்தை அருள்மிகு நித்ய கல்யாண பெரு மாள் திருக்கோவில், மாமல்லபுரம் அருள் மிகுஸ்தல சயன பெருமாள் திருக்கோவில், சிங்கபெருமாள் கோவில் அருள்மிகு பாட லாத்ரி நரசிம்மர்திருக்கோவில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத் திட்டம் –2 ல்சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்துதிருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக் கோவில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள்திருக்கோவில் , திருமுல்லை வாயில் அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோவில், திருவள்ளூர் அருள் மிகுவைத்திய வீர ராகவ பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதி கேசவ பெருமாள்திருக்கோவில், பூந்தமல்லி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்றுமாலை வாலாஜா சாலை சுற்றுலா வளா கத்தை வந்தடையும்.

மதுரை மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா வில் மதுரை – அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை – 2 வளா கத்தில் இருந்து காலை 8.30 மணிக்குபுறப்படும் பேருந்து அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில், ஒத்தகடை அருள்மிகு ஸ்ரீ யோகநரசிம்ம பெருமாள் திருக் கோவில், திருமோகூர் அருள்மிகு காளமேக பெருமாள் திருக்கோவில், திருகோஷ்டியூர் அருள்மிகு சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோவில், மதுரை அருள்மிகு கூடலழகர்பெருமாள் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை மாலைவந்தடையும்.

திருச்சி மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்று லாவில் திருச்சி ஓட்டல்தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப் படும் பேருந்து உறையூர் அருள்மிகு அழகியமணவாள பெருமாள் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோவில், உத்தமர் கோவில்அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோவில், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள்திருக்கோவில், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோவில் ஆகியகோவில்களுக்கு சென்று மாலை 5.00 மணிக்கு திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா வில் தஞ்சாவூர் ஓட்டல்தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப் படும் பேருந்து திருகண்டியூர் அருள்மிகுசாபவிமோச்சன பெருமாள் திருக்கோவில், கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோவில், திருநாகேஸ்வரம் அருள்மிகு உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோவில், நாச்சியார் கோவில் அருள்மிகு சீனிவாசபெருமாள் திருக்கோவில், திருச்சேறை அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோவில், மன்னார்குடி அருள்மிகுஇராஜகோபால சுவாமி திருக்கோவில், வடுவூர் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் ஆகியகோவில்களுக்கு சென்று இரவு ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள்ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒருநாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லாதொலைபேசி எண். 180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here