#TangkapAzamBaki பேரணியில் பங்கேற்றவர்கள் ஜாலான் டிராவலர்ஸ்-பங்சார் சந்திப்பில் போலீசாரால் நிறுத்தப்பட்டனர்

#TangkapAzamBaki பேரணியில் பங்கேற்பாளர்கள் பங்சார் எல்ஆர்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு, இப்போது ஜாலான் டிராவலர்ஸ்-பங்சார் சந்திப்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரிக்ஃபீல்ட்ஸ் போலீசார் போராட்ட ஏற்பாட்டாளர்களிடம் மேற்கொண்டு தொடர முடியாது என்று கூறியுள்ளனர்.

போலீஸ் லைட் ஸ்டிரைக் ஃபோர்ஸ் (LSF) சந்திப்பில் ஒரு சாலை தடுப்பினை ஏற்படுத்தி  வருகிறது. முன்னதாக மஸ்ஜித் நெகாராவிற்கு நடந்து செல்வதற்கு ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்ததாக அறியமுடிந்தது.

ஆர்வலர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம், மன்தீப் சிங், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யாகரன் மற்றும் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் ஆகியோர் கூட்டத்தில் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here