பெரிக்காத்தானின் ஆலோசகராக மகாதீர் நியமனம்; எதிர்க்கட்சி தலைவராக அவரை மாற்றும் நடவடிக்கையா?

பெட்டாலிங் ஜெயா:

பெரிக்காத்தான் “மாநில அரசு 4” (SG4) இன் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக துன் டாக்டர் மகாதீர் முகமட் நியமிக்கப்பட்டது, அவரை பெரிக்காத்தான் நேஷனலின் உண்மையான தலைவராக மாற்றும் ஒரு முன் நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே கூறினார்.

இந்த மாத ஆரம்பத்தில் எதிர்க்கட்சியின் கீழுள்ள பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களுக்கான கூட்டத்தின்போது பாஸ் மற்றும் மகாதீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அந்த சந்திப்புக்களில் பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் ஏன் அழைக்கப்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக விளக்குகிறது,” என்று பேஸ்புக்கில் நேற்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.

மகாதீரை மீண்டும் அரசியலில் முன்னணியில் நிறுத்துவதற்கான அவர்கள் மேற்கொள்ளும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை இது என்று முன்னாள் சபா முதலமைச்சரும், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சருமான சலே கூறினார்.

முஹிடினின் விருப்பங்கள் வரையறுக்கப்பட்டவை என்றும், எதிர்காலத்தில் கூட்டணியில் மகாதீர் வகிக்கும் அங்கம் குறித்து பாஸ் கட்சி எடுக்கும் எந்த முடிவையும் அவர் பின்பற்ற வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here