மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்- தி.மு.க. அறிவிப்பு

சென்னை:

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் 27 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க., அறிவித்து உள்ளது.

நேற்று முன்தினம் (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை கண்டித்து முதல்வர் ஸ்டாலின், டில்லியில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மம் காட்டும் பட்ஜெட்.

இதனை கண்டித்து, வரும் 27 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடக்கும். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here