MyEG இன் சேவை பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டதா? உண்மையில்லை என்கிறது நிறுவனம்

கோலாலம்பூர்: MY E.G. Services Bhd’sஇன் குடியேற்றச் சலுகை சேவை வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இடைநிறுத்தப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்கிறது.

பிப்ரவரி 2023 முதல் இடைநிறுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அரசாங்கத்துடனான நிறுவனத்தின் சலுகை சேவை அப்படியே உள்ளது என்று Bursa Malaysia Securities தாக்கல் செய்ததில் MyEG நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.

MyEG சேவைகளை வழங்குவது தொடர்பாக மலேசிய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்கிறது, அதன்படி, வெளிநாட்டு தொழிலாளர்களின் அனுமதி புதுப்பித்தல் சேவைகளுக்கான கட்டண வசூல் சட்டவிரோதமாக செய்யப்படுவதில்லை.

மேலும், சேவைகள் தோல்வியுற்றால், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில் சேகரிக்கப்பட்ட தொகைகள் திரும்பப் பெறப்படும் என்பது MyEG இன் கொள்கை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் இந்த விஷயத்தில் நிறுவனத்தின் இரண்டாவது அறிவிப்பு இதுவாகும். புதன்கிழமை, நிறுவனம் ஆன்லைனில் வழங்கும் சேவைகளை தவறாக சித்தரிப்பதை மறுத்தது. ஆனால் மலேசியாவின் குடிநுழைவுத் துறையுடன் அதன் சலுகையின் நிலையைக் குறிப்பிடாமல் நிறுத்தியது.

பிப்ரவரி 2023 முதல் குடிநுழைவுத் துறையால் அதன் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், வெளிநாட்டு தொழிலாளர்களின் அனுமதிகளைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை சட்டவிரோதமாக வசூலித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து MyEG பேசும் பொருளாகியது.

அனுமதி வழங்கத் தவறிய போதிலும் நிறுவனம் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தரவில்லை என்று கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் குற்றம் சாட்டினார். இந்நிறுவனத்தின் பங்கின் விலை நேற்று மாற்றமின்றி ஒரு பங்கின் விலை 78.5 காசாக ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here