மூடாவின் முடிவு சரியா, தவறா? சிவப்புக் கோட்டை தாண்டியதன் விளைவா?

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரங்சாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை மூடா கட்சியின் தேசியத் தலைவர் சைடை் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் மீட்டுக்கொண்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒற்றுமை அரசாங்கத்தில் பதவியைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் சைட் சடிக் இப்படியொரு தந்திரத்தைக் கையாள்கிறார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் புவாட் ஸர்காஷி குற்றஞ்சாட்டியிருந்தார்.

பதவியைப் பெற வேண்டும் என்பதற்காக சைட் சடிக் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு இதுபோன்ற அணுகுமுறையை அவர் கையாண்டிருக்கிறார் என்றும் புவாட் சாடியிருந்தார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு இதுநாள் வரை அளித்துவந்த ஆதரவை மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சடிக்க் மீட்டுக்கொண்டதால் அரஙசாங்கத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் வந்துவிடாது என்று அம்னோ தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.

என்ன சொல்கிறார் சைட் சடிக்?

பதவி அல்லது சலுகைகளைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து விலக மூடா கட்சி முடிவு எடுத்திருக்கிறது என்பது அடிப்படையற்றக் கூற்று என்று சைட் சடிக் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அன்று தொடங்கி இன்று வரை மக்கள் நலனுக்குப் போராடுவது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். நாட்டின் மேம்பாட்டுக்கு உதவவும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் அரசியலில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

சிலர் வெளிப்படையாகவே மக்களை ஏமாற்றுவதற்குத் துணிந்து விடுகின்றனர். இடதுகை ஊழலை எதிர்க்கிறது. ஆனால் வலதுகையோ ஊழல்வாதிகளை விடுவித்துவிடுகிறது என்றும் அவர் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பதவியோ அல்லது சலுகையோ அல்லது அதிகாரத்தையோ நான் பெற விரும்பி இருந்தால் வாய்மூடி மௌனமாகவே இருந்திருப்பேன். எந்த விவகாரம் குறித்தும் குரல் எழுப்பியிருக்க மாட்டேன். எல்லாவற்றுக்கும் ஆமாம்சாமி போட்டியிருப்பேன் என்றும் சைட் சடிக் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஊழலை ஒழித்தாக வேண்டும். அதற்காகக் குரல் கொடுத்திருக்கின்றேன். இந்தப் போராட்டம் ஓயாது என்றும் அவர் சொன்னார். 2020ஆம் ஆண்டில் ஷெரட்டன் அரசியல் நகர்வின்போது எனக்கு அமைச்ங்ர் பதவி கொடுக்க முன்வந்தார்கள்.

அதன்பின் ஜிஎல்சி நிறுவனங்களிலும் பதவி கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் கொள்கை அடிப்படையில் இவற்றை எல்லாம் நான் நிராகரித்துவிட்டேன் என்றும் சைட் சடிக் தன் முடிவைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

கொள்கைவாதி

ஒற்றுமை அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை சைட் சடிக் மீட்டுக்கொண்டிருப்பது அவரின் கொள்கைக்கு ஏற்ப அமைந்திருக்கும் முடிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என ரெம்பாவ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்டிருக்கின்றார்.

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் யமிடி, ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் கொள்கை அடிப்படையில் சைட் சடிக்க் இந்த முடிவை எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் கைரி சொன்னார்.

பக்காத்தான் ஹராப்பான் மூலம் கிடைத்த வாக்குகளில்தாம் சைட் சடிக் மூவார் தொகுதியில் வெற்றிபெற்றதாக அக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். ஆனால், மூவார் வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பானை ஆதரித்ததன் அடிப்படையில்தான் சைட் சடிக் வெற்றிபெற முடிந்தது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ங்டை் ங்ாடிக் ஒரு கொள்கைவாதி. அந்த அடிப்படையில்தான் அவர் இம்முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் கைரி கருத்துரைத்திருக்கின்றார்.

பாதிப்பு இல்லை

சைட் சடிக் எடுத்துள்ள முடிவு ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பையும் கொண்டுவந்துவிடாது என்று நிதி துணையமைச்ங்ர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் கருத்துரைத்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் அதேங்மயம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைப்புக்காட்டி வரும் மடானி அரசாங்கத்திற்கு இவருடைய முடிவால் எந்தப் பாதகமான முடிவும் வந்துவிடாது.

நடப்பு அரசியல் நிலைத்தன்மை ஆக்கப்பூர்வமான தன்மையில் அமைந்திருக்கின்றது. இதன்மூலம் அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கொள்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரக்கூடாது என்று சில முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மற்றபடி அரசியல் நிலைத்தன்மை மீது அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது என்றார் மஸ்லான்.

அரசியல் நிலைத்தன்மை வலுவுடன் இருப்பதால் அரசாங்கம் மாறிவிடாது. ஒருவர்தான் தன் ஆதரவை மீட்டுக்கொண்டிருக்கிறார். நம்மிடம் 147 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே அரசாங்கம் வலுவுடன்தான் உள்ள்து. அரசு ஒருபோதும் மாறிவிடாது என்றும் மஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.

சிவப்புக் கோடு

இந்நிலையில் சிவப்புக் கோட்டை பக்காத்தான் ஹராப்பான் தாண்டிவிட்டதால்தான் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து மூடா கட்சி விலகுவது என முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் தலைமைச் ஙெ்யலாளர் அமிர் அப்துல் ஹாடி கருத்துரைத்துள்ளார்.

15ஆவது பொதுத்தேர்தலின்போது இக்கூட்டணி சீர்திருத்தத் திட்டங்களை அறிவித்தபோது மூடா அதன்மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காததால் மூடா கட்சி இம்முடிவை எடுத்திருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

47 குற்றசாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் ஸாஹிட் ஹமிடி மீது மீண்டும் குற்றசாட்டு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார். ங்ட்ட பரிபாலனத்துறையில் சில முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்குச் ங்ட்டத்துறைத் தலைவருக்கும் டிபிபி தரப்புக்கும் இடையேயான அதிகாரத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிரணியில் சைட் சடிக்

ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொண்டிருக்கும் சைட் சடிக் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது எதிரணியில் அமர்வார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் தம்முடைய இருக்கையை மாற்ற வேண்டும் எனக் கோரி சைட் சடிக் அனுப்பிய கடிதத்தைத் தாம் பெற்றுக்கொண்டதாகவும் அவர் ங்ோன்னார். இதில் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. சைட் சடிக் அமரும் இருக்கை எதிரணிக்கு மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து மூடா கட்சி விலகிக்கொண்டதால் அது பற்றிய விமர்ங்னங்கள் இன்னும் நீடித்த வண்ணம் இருக்கின்றன. சைட் சடிக் எடுத்த முடிவு ங்ரியா? தவறா என்ற விவாதம் நீடிக்கின்றது.

ங்டை் ங்ாடிக்கைப் பொறுத்தவரையில் கொள்கை அடிப்படையில் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தமது தரப்பு வாதத்தை முன்வைத்திருக்கின்றார். ஆனால் மூடா தற்போதைய சுழ்நிலையில் மடானி அரசாங்கத்தில் இருந்து விலகியிருக்கக்கூடாது என்று இன்னொரு தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்திருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மக்கள் மன்றமே ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்லட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here