யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம்

தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.

மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசமும் ஒரு நாசித் துவாரத்திலிருந்து  இன்னொரு நாசி துவாரத்தில்  மாறிக்கொண்டே இருக்கும்.

சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர். பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள்.

இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் நமக்கு மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கிறது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here