கீழ்த்தரமான அரசியல் நிறுத்தப்பட வேண்டும் – ஜோகூர் பெரிக்காத்தான் துணைத் தலைவர்

ஜோகூர் :

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தை ஆதரிப்பதாக பெரிக்காத்தான் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதால், அவர்களின் தொகுதிகளுக்கான அரசாங்கம் ஒருபோதும் பெரிய திட்டங்களை உறுதி செய்யாது என்று ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் துணைத் தலைவர் முகமட் சோலிஹான் பத்ரி தெரிவித்துள்ளார்.

அன்வாருக்கு ஆதரவாக மாறிய நான்கு எம்.பி.க்களின் செயல்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமற்றவை. அத்தோடு இரு தரப்பும் கடைப்பிடிக்கும் மலிவான அரசியல் நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் ஒரு எம்.பி.யின் பணி சிறிய வட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படக்கூடாது, மாறாக அவர்கள் தங்களின் தொகுதியில் உள்ள ஏழைகளுக்கு உதவ வேண்டும்” என்று முகமட் சோலிஹான் கூறினார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதாரக் கொள்கைகள், கல்வி மற்றும் இஸ்லாத்தின் எதிர்காலம் மற்றும் மலாய்க்காரர்களின் சமூக-பொருளாதாரம் உட்பட பரந்த வேலை நோக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், வேலை வாய்ப்புகள், வீட்டுவசதி மற்றும் பிற சமூகப் பிரச்சினைகளைக் கவனித்துக்கொள்வதற்கு மாநில முன்னேற்றங்கள் குறித்து எம்.பி.க்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் அவர் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிர்கட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது தொடர்பில், அவசர கூட்டத்தை இன்றிரவு நடத்தவுள்ளதாக பெர்சாத்து கட்சியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here