பிரதமர் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியர் உருமாற்றப் பிரிவிற்கு (மித்ரா) ஒதுக்கப்பட்டிருக்கும் 100 மில்லியன் ரிங்கிட் இந்தாண்டு இறுதிக்குள் இந்திய சமூகத்தை சென்றடையும் என்று மித்ராவின் சிறப்பு பணிக்குழுத் தலைவரான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மித்ரா செப்டம்பர் 19ஆம் தேதி வரை 39.6 மில்லியன் தொகைக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி அத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அத்திட்டங்களானது;
1.இளங்கலை கல்விக்கான நிதியுதவி
2. தனியார் மழலையர் பள்ளி ஆரம்பக் கல்வி மானியத் திட்டம்
3.டயாலிசிஸ் மானிய உதவித் திட்டம்
4. இலக்கு சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
5. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 72 மக்கள் சேவை மையங்களுக்கான நிதியுதவி
6 ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் தரவு சேவைகள் (DOD) தொழில்நுட்ப திட்டம் மற்றும் மின்மயமாக்கப்பட்ட ஆட்டோமேஷன் முன்னேற்றத் திட்டம் (EAAP); தமிழ் தேசிய வகைப் பள்ளி (SJKT) மடிக்கணினி உதவித் திட்டம் (புதுப்பிக்கப்பட்டது).
மித்ராவின் முன்முயற்சியில் இந்திய சமூகத்தினர் பயனடைய கூடிய மேலும் சில திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவையாவன என்று பார்ப்போம்
2023 ஆம் ஆண்டில் பரம ஏழ்மையான இந்தியர்கள் மீது கவனம் செலுத்தப்படும். கோலாலம்பூரில் மொத்தம் 1,800 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என e-kasih அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டது. அவர்களின் தனிநபர் வருமானம் 339 ரிங்கிட்க்கும் குறைவாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஏழ்மையான பிரிவிலிருந்து வெளியேறுவதற்கு தனிநபர் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற திட்டத்திற்காக RM8.24 மில்லியன் ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பரம ஏழைகளை ஒழிக்க வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவுக்கு இணங்க இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் சாதிக்க துடிக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் பயோடெக்னாலஜி தகவல் மையம் (MABIC) மூலம் 698 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் 11 பேர் வரை பங்கேற்கும் வகையிலான Petri Dish (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல்) பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு யார் விஞ்ஞானியாக விரும்பும் 2 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளில் 4, 5 & 6 வகுப்புகளை சேர்ந்த 1,000 மாணவர்களை இலக்காகக் கொண்டது. இது இராண்டு திட்டமாகும். மித்ராவின் வழி அதிகமான மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறது.
அடுத்ததாக மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு உபகரணங்கள் அல்லது உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஏறக்குறைய 1,000 தகுதியுடைய வியாபாரிகள்/விற்பனையாளர்களுக்கு 5,000 ரிங்கிட்டிற்கு மிகாமல் உபகரண உதவி வழங்கப்படும். இதன் மதிப்பிடப்பட்ட செலவு RM5 மில்லியனாகும்.
அபிலாஷைகளை உறுதிப்படுத்த மித்ரா மீண்டும் உறுதியளிக்கிறது. இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒதுக்கப்பட்ட நிதிகள் கவனமாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படும் என்று டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.