வாடிக்கையாளர்களின் நலன்கருதி உயர்தர விநியோகஸ்தர்களை மலேசியாவுக்கு வந்திருக்கும் GM Klang

கிள்ளான்,
உலகின் மிகப்பெரிய பொருட்கள் மொத்த வியாபார முனையம் என அங்கீகாரம் பெற்றிருக்கிறது  Yiwu China Commodities Cit.y இந்நிறுவனமானது சீனாவில் இருந்து கடல் கடந்து 26 மிகப்பெரிய விநியோகஸ்தர்களை மலேசியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டுப வணிகர்கள் அவர்களுடன் இணைந்து புதிய வணிகங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தி இருக்கிறது.

மலேசியா-சீனா இடையிலான வணிக உறவுகளுக்கு வலுவூட்டும் வகையில் YiwuChina Commodities City நிறுவனம் இந்த மாபெரும் திட்டத்தை முன்னெடுத்திருக் கிறது. மலேசியத் தொழில்முனைவோர் Yiwu விநியோகஸ்தர்களிடம் இருந்து நேரடி யாகவே உயர் தரத்திலான பொருட்களைக் கொள்முதல் செய்யலாம்.

மலேசியாவின்மிகப்பெரிய மொத்த வியாபார முனையமான GM Klang Wholesale City உடன் கைகோத்திருக்கிறது Yiwu.

இதன் தொடர்பான ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்து Yiwu தேர்வுகள் என பொருட் கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கண்காட்சியானது ஜிஎம் கிளாங் மொத்த வியாபார முனையத்தில் நண்பகல் 12.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை நேற்று பிரமாண்டமாகத் தொடக்கிவைக்கப்பட்டது.

Yiwu China Commodities City நிறுவனம் சீனாவில் இருந்து 26 மிகப் பிரபலமான விநியோகஸ்தர்களை வரவழைத்திருக்கிறது. அவர்கள் பல்வேறு வகையான பொருட் களைக் கண்காட்சியில் வைத்துள்ளனர். இதன்மூலம் மலேசிய வணிகர்களைத் தங்க ளின் வர்த்தகப் பங்காளிகளாகக் கவர்வதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் மலேசியர்கள் நேரம், பணம் போன்றவற்றைச் செலவிட்டு சீனாவுக்குச் செல்வதைவிட சீனாவே இங்கு வந்திருக்கிறது. Yiwu China Commodities Cit நிறுவனம். மலேசிய வணிகர்களுக்கு இதனால் நேரம், பணம், பயணம் அனைத்தும் மிச்சப் படுத்தப்பட்டிருக்கிறது.  கிள்ளான் பாண்டார் பொட்டானிக் கெப்பிட்டலில் உள்ள GM Klang Wholesale City முனையத்திற்கு வருகை புரிந்து தாங்கள் ஆர்வம் கொண்டுள்ள வணிகத் துறைகளில் முதலீடு செ ய்யும் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். இதன் மூலம் சீனாவின் Yiwu விநியோகஸ்தர்களிடம் இருந்து நேரடியாகப் பொருட்களைத் தருவிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தும் வாய்ப்பை அவர்கள் பெறுகின்றனர்.

செயற்கைப் பூக்கள், பலூன்கள், விருந்துக்கான அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் அலங் காரங்கள், பரிசுப் பொருட்கள், பரிசுக் கொடுப்பதற்கான பைகள், பொம்மைகள், சிகை அலங்காரப் பொருட்கள், கல்குலேட்டர்கள், கைப்பைகள், சமையல் அறைப் பொருட்கள், எழுது உபகரணங்கள், அலுவலகத்திற்குத் தேவையான உபகரணங்கள், ஆண்-பெண் குளியல் உடைகள், அரைக்கால் சிலுவார்கள், சமையல் அறை சு வர் ஒட்டிகள், சமையல்அறைப் பொருட்கள், கின்னங்கள், திரைச்சீலைகள், சேஃபா நாற்காலிகள், குஷன்கள், படுக்கை விரிப்புகள், அலங்காரப் பொருட்கள், நகப்பூச்சு போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.

சீன மொழி தெரியாதவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகளை ஜிஎம் கிளாங் மொத்த வியாபார முனையம் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல மலேசியத் தொழில்முனைவோர் சீனத் தொழில்முனை வோருடன் பல ஒப்பந்தங்களில் கையொப்பமி ட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here