கோலாலம்பூர்:
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் ‘ரெட் ஸோன்’ வார்டில் இன்று சிறியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் (நடவடிக்கைகள்) அக்மட் முக்லிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.
தீ விபத்து பற்றிய தகவல் இன்று மாலை 5.13 மணிக்கு கிடைத்ததும், தீயணைப்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம், அங்குள்ள ஒரு சாக்கெட் ஸ்விட்ச்சில் ஏற்பட்ட கோளாறு என்றும், இருப்பினும் தீயை மருத்துவமனை பணியாளர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். எந்தவொரு உயிரிழப்பும் இல்லை எனவும் அவர் கூறினார்.



















