சாலை விபத்து: காரின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்

குவாந்தான்:

ஜாலான் பின்டாசன் குவாந்தானில் MPV வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை உட்ப#டுத்திய சாலை விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் MPVக்கு அடியில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை 7.59 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரி சுல்ஃபாட்லி ஜகாரியா கூறினார்.

உடனே இந்தேரா மஹ்கோத்தா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட எட்டு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும், அவர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவரின் உடலை அகற்றி, மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here