வாக்குவாதத்தின் போது பினாங்கு பாலத்தில் இருந்து நண்பர் தன்னை கடலுக்குள் தள்ளியதாக பெண் புகார்

ஜார்ஜ் டவுன்:

நேற்றிரவு பினாங்கு பாலத்தின் கிமீ 2.8 இல் நடந்த சம்பவத்தில், பாலத்தின் ஓய்வு எடுக்கும் பகுதியில் தகராறு ஏற்பட்டபோது, தனது ஆண் நண்பர் தன்னை தள்ளிவிட்டதாக கடலுக்குள் விழுந்த பெண் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 40 வயதான பெண், வெளி மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரியான தனது 37 வயது நண்பரால் கடலுக்குள் தள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டினார் என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

கொலை முயற்சிக்காக குற்றவியல் சட்டத்தின் 307 வது பிரிவின் கீழ் சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“முன்னதாக, நேற்றிரவு 7.45 சம்பவத்தில், நண்பர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதன்போது இருவரும் பாலத்திலிருந்து கடலுக்குள் விழுந்தனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் அவர்களைக் காப்பாற்ற விரைவாக கடலுக்குள் குதித்தார், குறித்த மூவரும் மீன்பிடி படகு மூலம் மீட்கப்பட்டு பத்து உபான் படகுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்,டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here