கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ முயற்சிகள் மூலம் ஊக்கமளிக்கிறது Touch ‘n Go குழுமம்!

கோலாலம்பூர்:

Touch ‘n Go Group குழு IDEAS Autism மையத்துடன் இணைந்து, கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ஹிப்போதெரபி மற்றும் ஹைட்ரோதெரபி அமர்வுகளை வழங்கியுள்ளது.

குறித்த குழந்தைகளுக்கான ஆதரவான சூழலை உருவாக்க, தன்னார்வலர்களின் உதவியுடன் நீச்சல் குளத்தில் ஹிப்போதெரபி மற்றும் ஹைட்ரோதெரபி அமர்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்த குழுக்கள் ஈடுபட்டுவருவது Touch ‘n Group குழுவின் சமூக ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுகிறது.

IDEAS Autism மையம் கற்றல் குறைபாடுகள் உள்ள (rythemic movements) குழந்தைகளுக்கு, மூளையின் நடுப்பகுதியில் தூண்டுதலை ஊக்குவிக்கும் செயல்முறைக்கு உதவுகிறது. இதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த உடலின் சமநிலையையும் மேம்படும்.

இவ்வாறு நரம்பியல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் முழு திறனையும் பிரகாசமான எதிர்காலத்தையும் அடைய வழிவகுக்கும் என்று Touch ‘n Go குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லம் ஜாய் டெங் கூறினார்.

IDEAS Autism மையம் மற்றும் Touch ‘n Go குழுமம் இணைந்து 10-14 வயதிற்குட்பட்ட குழந்தைக்களுக்கான முன்தொழில் திட்டத்தை உருவாக்கவும், தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அணுகலை மேம்படுத்தவும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன என்றும் அவர் கூறினார்.

அவற்றில் ஒரு திட்டமாக IDEAS Autism மற்றும் United Voice உடன் இணைந்து கலைஞர்களின் ஓவியங்களைக் கொண்ட Touch ‘n Go கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நிதிதிரட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.

மேல் விபரங்களுக்கு Touch ‘n Go அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை நாடுங்கள், www.touchngo.com.my

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here