பத்தாங் காலி நிலச்சரிவு குறித்த முழு அறிக்கை மூன்று வாரங்களில் வெளியாகும்- மந்திரி பெசார்

செலாயாங்:

பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவம் குறித்த முழு அறிக்கை அடுத்த மூன்று வாரங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்துள்ளார்.

“அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1972 இன் கீழ் ஆவணம் இன்னும் இருப்பதால் சம்பந்தப்பட்ட சட்ட அம்சங்களை மறுஆய்வு செய்யும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்றும், “இந்த விவகாரம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அடுத்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், பத்தாங் காலி பகுதியில் முகாமிட்டிருந்த ஒரு சுற்றுலாக்குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here