அடுத்த மூன்று நாட்களுக்கு தீபகற்பத்தின் வடப் பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. மெட்மலேசியா ஒரு அறிக்கையில், கனமழை மற்றும் பலத்த காற்று நீண்ட நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களின் கடலோரப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறினார்.
கெடா, பேராக், கிளந்தான், பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா மற்றும் பினாங்கு முழுவதிலும் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. மழை ஒரு மணி நேரத்திற்கு 20 மிமீ தீவிரம் மற்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்றும் மெட்மலேசியா கணித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் பேராக்கின் தைப்பிங், செலாமா மற்றும் பாத்தாங் பாடாங் ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 129 பேர் வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் 102 பேர் கெடாவின் பாலிங்கிலும் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சரவாக்கில், மிரியில் சுமார் 195 பேர் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.









