கோலாலம்பூர்:
அண்மையில் சபாவிலுள்ள ஒரு ஹோம்ஸ்டேயின் சுவர் மற்றும் CCTV என்பவற்றில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், வெளிநாட்டு தம்பதிகள் செய்த புகாரத்தொடர்ந்து, குறித்த ஹோம்ஸ்டே கணக்கை Airbnb தனது அகப்பக்கத்திலிருந்து அகற்றியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் குறித்த home stay யிணை Airbnb பாதுகாப்புக் குழு தற்காலிகமாக நீக்கியுள்ளது.
Airbnb இன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கான பொது மேலாளர் அமன்பிரீத் பஜாஜ் பெர்னாமாவிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் Airbnb மறைக்கப்பட்ட கேமராக்கள் வைத்திருந்த விடுதியை தடை செய்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களைக் கேட்டு தாம் ஏமாற்றமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது போன்ற புகார்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் நாங்கள் எங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.