சென்னை: நிலவின் தென்துருவத்தில் உள்ள சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ முயன்று வரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சீனா, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால்பதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மாறாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங் கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் தான் காரணம். நிலவின் தென்துருவ ஆய்வுக்காக இந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் 22ம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்’ முறையில் தரையிறங்கியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரின் இதயப்பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறிய நிலவில் இறங்கியது. அதோடு நிலவின் மேற்பரப்பின் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோவை பதித்தது. பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தொலைவு நிலவில் பயணித்த ஆக்சிஜன் உள்பட 8 தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தது.
அதன்பிறகு நிலவில் இரவு பொழுது தொடங்கியதால் விக்ரம் லேண்டர், ரோவரில் இருந்த டேட்டாக்களை முழுவதுமாக இஸ்ரோ பெற்றது. இதன்மூலம் சந்திரயான் 3 திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றது. அதன்பிறகு லேண்டர், ரோவர் ஆகியவை தூக்க நிலைக்கு கொண்டு சென்றது. அதாவது இரவில் சூரிய ஒளி கிடைக்காதது மற்றும் அதிக குளிரால் அந்த கருவிகள் இயங்காமல் போகலாம் என்பதால் இந்த நட வடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது. மேலும் இரவு பொழுது முடிந்து மீண்டும் நிலவில் பகல் பொழுது தொடங்கும்போது லேண்டர், ரோவரை இயக்க முயற்சிக் கலாம் என இஸ்ரோ அறிவித்தது.
தற்போதைய சூழலில் நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் உள்ள இடத்தில் கடந்த 22ம் தேதி சூரியஒளி பட்டது. தற்போது 5 நாட்களாக அங்கு பகல் நேரமாக உள்ளது. ஆனால் இன்று வரை விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை கண்விழிக்கவில்லை. லேண்டர், ரோவரிடம் இருந்து இஸ்ரோவுக்கு சிக்னல் வரவில்லை. இந்த சிக்னலை பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து வரும் நிலையில் தான் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள் ளிட்டவை மீண்டும் செயல்பாட்டு வருவதற்கான வாய்ப்பு என்பது மிகமிக குறைவு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நிலவில் நீடித்த கடும் குளிரால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள கருவிகள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதை இஸ்ரோ முன்கூட்டியே அறிந்து இருந்தது. ஆனால் கடும் குளிரில் அந்த கருவிகள் உறைந்துபோய் பாதிக்கப்படாமல் இருப்பதற் கான எந்த சிறப்பம்சங்களையும் லேண்டர், ரோவர் ஆகியவை கொண்டிருக்க வில்லை. அதாவது லண்டர், ரோவர் என்பது 14 நாட்கள் ஆய்வுக்காக நிலவுக்கு அனுப்பியதால் இதனை இஸ்ரோ செய்யவில்லை. இருப்பினும் மீண்டும் சூரியஒளி படும்போது அதன் மூலம் குளிரில் இருக்கும் கருவிகள் சூடேறி மீண்டும் செயல் பாட்டுக்கு வரும் என இஸ்ரோ நம்பியது.
இதனால் தான் மீண்டும் லேண்டர், ரோவரை உயிர்த்தெழ வைப்பதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கியது. இது 50:50 சதவீத வாய்ப்பு தான் என்றாலும் கூட இந்த முயற்சி கைக்கூடினால் நிலவு குறித்த இன்னும் அதிக தகவல்களை பெற முடியும் என்பதால் இஸ்ரோ அதில் மும்முரமாக இறங்கி உள்ளது. அதாவது கடந்த 5 நாட்களாக சூரியஒளி பட்டாலும் கூட ரோவர், லேண்டர் இயங்கவில்லை.
இதனால் மீண்டும் அது செயல்படுவதற்கான வாய்ப்பு என்பது மங்கிபோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவற்றை கண்விழிக்க வைப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. ஏனென்றால் ஒவ்வொரு மணிநேரமும் முக்கியமானதாகும். தற்போதைய சூழலில் லேண்டர், ரோவர் ஆகியவை விழித்தெழாவிட்டாலும் கூட இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் திட்டமிட்ட காலத்துக்கு இரண்டு கருவிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதோடு ‛சாப்ட் லேண்டிங்’ முறையில் இந்தியா தனது திறமையை நிரூபித்துள்ளது” என்றார்.
இருப்பினும் கூட இஸ்ரோ தலைவர் சோமநாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தும் பணிகள் என்பது தொடர்ந்து வருகிறது. மொத்தம் 14 நாட்கள் அங்கு பகல் பொழுது இருக்கும். 22ம் தேதி லேண்டர், ரோவரில் சூரியஒளி படுகிறது. இதனால் எப்போது வேண்டுமா னாலும் லேண்டர், ரோவர் கண்விழிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.