கோலாலம்பூர்:
50 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியை 160 ரிங்கிட் மொத்த வியாபார விலையில் வாங்குவதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கங்களுக்கும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தொழில்முனைவோர்களுக்கும் அங்காடி வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது, உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நடைமுறைச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குமாகும் என்று விவசாயம், உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்தது.
அதே சமயத்தில் இந்த அனுமதியானது உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகத்தை நிலைப்படுத்துவதற்கு உதவும் என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
தங்களுடைய வியாபாரத்திற்கக உள்நாட்டு உற்பத்தி வெள்ளை அரிசியை மேற் குறிப்பிட்ட தரப்பி னர் வாங்குவதைக் குறைக்கும்பட்சத்தில் உள்நாட்டு வெள்ளை அரிசி க்கு ஏற்பட்டி ருக்கும் தட்டுப்பாடு குறைவதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சு கூறியது.
வியாபார நோக்கங்களுக்காகவும் வீடுகளில் பயன்படுத்து வதற்காகவும் தேவைப்படும் அரிசி விநியோகத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சு இந்நடவடிக்கையை எடுத் திருக்கிறது.
உள்நாட்டு வெள்ளை அரிசிக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அதனைச் சமாளிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அமைச்சு விளக்க மளித்தது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உணவக உரிமையாளர்கள் சங்கம், உணவு விற்பனையாளர், அங்காடி வியாபாரிகள் ஆகியோருடன் அமைச்சு நடத்திய ஒரு சந்திப்பில் இந்த உடன்பாடு காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.