ஜார்ஜ்டவுன்:
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஒப்பந்ததாரரின் மனைவியான இந்தோனேசியப் பெண்ணைக் கடத்தி, பிணைப்பணமாக RM540,000 கேட்டு ஒப்பந்ததாரரை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில், ஒன்பது நபர்கள் இன்று மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகமட் நோர் ஷாரிசுவான், தான் ஜிம் சுன், சி. யோகநாதன், லோக் வாய் லூன், ஹாபிசான் சம்சுடின், நோராஸ்லின் மாட் கசா, எலைன் கூய் உட்பட இரு இந்தோனேசியர்கள் ஆகியோர் அடங்குவர்.
29 மற்றும் 41 வயதுக்குட்பட்ட அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் முகமட் சைடிக்கு முன்நிலையில், ஒரு மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டவுடன் புரிந்துகொள்வதாக தலையசைத்தனர், ஆனால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டுகளின்படி, செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஸ்ரீ அமான் அபார்ட்மென்ட், பாயா தெருபோங்கில் உள்ள ஒரு யூனிட்டில் 540,000 ரிங்கிட் பணம்மறிக்கும் நோக்கத்துடன் 36 வயதான பாதிக்கப்பட்டவரை கடத்தியதாக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீது கடத்தல் சட்டம் 1961 (சட்டம் 365) பிரிவு 3 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 30 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்பால் அடிக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் படிக்கப்பட்டது.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால், இவ்வழக்கில் ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை.
வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்கும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் டிசம்பர் 11 தேதியை நிதிமன்றம் நிர்ணயித்துள்ளது.