ஜார்ஜ்டவுன்:
ஒரு ஜோடியை ஒரு நபர் தாக்குவது தொடர்பில் வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, போலீசார் இரு உள்ளூர்க்காரர்களை கைது செய்து,நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
Nan Manjoi8715 என்ற X பயனர்பதிவேற்றிய 14 வினாடி வீடியோ , பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயாரால் பதிவுசெய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பண்டார் பாருவில் நடந்ததாக சோதனையில் தெரியவந்தது என்று வடகிழக்கு காவல்துறை தலைவர் துணை ஆணையர் சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஒரு தவறான புரிதலால் ஏற்பட்டது, ஆனால் விரைவில் சண்டையாக மாறியது என்றும் இது தொடர்பில் மூன்று குற்றச்சசாட்டுக்களை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில், ஜாலான் படானியில் உள்ள ஒரு உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர்.
28 வயதான நபருக்கு நான்கு முந்தைய குற்றவியல் பதிவு உள்ளது என்றும் அவர் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
புதன்கிழமையன்று, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ் இரண்டு உள்ளூர் ஆண்களும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர், அதே சமயம் சந்தேக நபர்களில் ஒருவர் அதே சட்டத்தின் பிரிவு 323 மற்றும் பிரிவு 506 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
இது தொடர்பில் ஊகங்களைத் தடுக்க வீடியோ காட்சிகளைப் பரப்ப வேண்டாம் என்று நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.