மனைவியைத் துன்புறுத்திய குமரனுக்கு ஆறு மாத சிறை

ஈப்போ:

னது மனைவியை தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றச்சாட்டில் கணவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றஞ் சாட்டப்பட்ட ஆர்.குமரன், 32, குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மாஜிஸ்திரேட் சிட்டி நோரா ஷெரீப், இத்தண்டனையை வழங்கினார்.

கடந்த புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் இங்குள்ள எண் 17, ஹாலா கிளெடாங் எமாஸ் 11A, தாமான் கிளெடாங் எமாஸ் என்ற முகவரியில் உள்ள வீட்டில், 32 வயதான அவரது மனைவி ஆர். சாந்தினிக்கு எதிராக அவர் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டார்.

குமரன் தனது மனைவியிடம் கொஞ்சம் பணம் கேட்டதாகவும், ஆனால் அவர் அதை கொடுக்க மறுத்ததால், அவர் தன் மனைவியின் இடது கன்னத்தில் அறைந்தார்.

பின்னர், மனைவி சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மருத்துவர் அவருக்கு இடது கன்னத்தில் மென்மையான திசு காயமடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்.

அதே நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாள அட்டையை போலீஸ்காரருக்கு வழங்கத் தவறியதாக மற்றுமொரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

குற்றப்பத்திரிகையின்படி, குமரன் நேற்று மதியம் 1.20 மணியளவில் அதே முகவரியில் உள்ள போலீஸ்காரர் ஒருவர் அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது அவற்றை வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1990 ஆம் ஆண்டு தேசியப் பதிவு ஒழுங்குமுறை விதி 25(1)(n) இன் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிசெய்யும்.

இந்த குற்றத்திற்காக, குற்றவாளிக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நேற்றைய தினம் முதல் அவர் சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here