தெரெங்கானுவின் ஆடைக் கட்டுப்பாட்டால் முஸ்லீம் பெண்கள் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து விலகினர்

ஷரியாவுக்கு இணங்காத ஆடைகள் காரணமாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்த பாஸ் தலைமையிலான மாநில அரசின் முடிவைத் தொடர்ந்து தெரெங்கானுவைச் சேர்ந்த பல முஸ்லீம் பெண்கள் ஜிம்னாஸ்ட்கள் விளையாட்டிலிருந்து ஒட்டு மொத்தமாக ஓய்வு பெற்றுள்ளனர். தெரெங்கானு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தின் தலைவர் அப்துல் ரசாக் மாட் அமீன் கூறுகையில், இந்த கொள்கை கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.

2024 சுக்மா (மலேசியா விளையாட்டு) வுஷூ நிகழ்வில் முஸ்லீம் பெண்கள் ஜிம்னாஸ்ட்களுக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் நான்கு பேர் மட்டுமே வாய்ப்பைப் பெற்றனர். மீதமுள்ளவர்கள் ஓய்வு பெற்று படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்தனர் என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார். முஸ்லீம் பெண்கள் ஜிம்னாஸ்ட்  போட்டி விளையாட்டில் அனுமதிக்கும் வகையில் தெரெங்கானு நிர்வாக கவுன்சிலருடன்  விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றும் ரசாக் கூறினார்.

பெண்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மாநிலம் பங்கேற்காதது தெரெங்கானுவுக்கு இழப்பு. ஷரியாவுக்கு இணங்குதல் கொள்கையானது தெரெங்கானுவில் திறமையை வளர்க்க முடியாது என்று அவர் கூறினார். ஆனால் இப்போதைக்கு, (PAS) அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, சுக்மாவில் முஸ்லிம் பெண்கள் ஜிம்னாஸ்ட் விளையாட்டில் பங்கேற்பதை தடை செய்யும் கொள்கைக்கு நாங்கள் இணங்குவோம்.

இஸ்லாமியக் கட்சியின் தலைமையிலான கிளந்தான், ஜிம்னாஸ்டிக்ஸில் பெண்களை பங்கேற்க அனுமதிக்கும் போது, தெரெங்கானு அத்தகைய கொள்கையைத் திணிக்க முடிவு செய்திருப்பது அவருக்குப் புதிராக இருந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷாருல் அய்மி கமரு ஹிசாம் ஆகியோரை கொண்டு இப்போது ஆண் விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டு, நாட்டின் சிறந்த ஆண் ஜிம்னாஸ்ட்களை உருவாக்கியுள்ளதாக ரசாக் கூறினார்.ம்தெரெங்கானுவின் ஆண் ஜிம்னாஸ்ட்களுக்கு மாநில அரசு முழு ஆதரவை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here