கோலாலம்பூர்:
மலேசியாவில் புகைமூட்டம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக சுற்றுச் சூழல் அமைச்சர் நாஸ்மி அகமட் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் காட்டுப் பகுதிகளில் தீ மூண்டு இருப்பதே மீண்டும் புகைமூட்டம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்றார் அவர்.
இதனிடையே, சுமத்ரா, கலிமந்தானில் 35 பெரிய பண்ணை இடங்களில் தீயை அனைத்துவிட்டதாக நேற்று இந்தோனேசியா தெரிவித்தது. அந்த இடங்களே புகை கிளம்புவதற்கு மூல இடங்களாக இருந்ததாக அது மேலும் கூறியது.























