பூச்சோங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெஸ்லா கார்!

கோலாலம்பூர்:

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பூச்சோங்கில் நேற்று இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அக்கார் 70 விழுக்காடு எரிந்து நாசமானது. அதிஷ்டவசமாக ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் இரவு 8.32 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மொத்தம் ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும் சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (நடவடிக்கை) துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

“சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அதில் 70 சதவீதம் தீப்பிடித்து எரிந்த டெஸ்லா கார் சம்பந்தப்பட்டிருப்பதையும், உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் தீயை வெற்றிகரமாக அணைத்தனர்.

“உணவுக்குச் செல்வதற்காக வாகன உரிமையாளர் அதை சிறிது நேரம் நிறுத்தியிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக போலீஸ் தடயவியல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here