மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு தலா 10 கிலோ கொண்ட 10,000 அரிசி மூட்டைகளை வழங்கினார் ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு:

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு தலா 10 கிலோ கொண்ட 10,000 அரிசி மூட்டைகளை வழங்கினார்.

மக்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட மாண்புமிகு சுல்தான், தற்போதுள்ள அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசி விலை உயர்வு போன்றவற்றினால் ஏழைகளின் சுமையை ஆழமாகப் புரிந்து, இவ்வாறான நன்கொடைகளை அழிப்பது இது முதன்முறையல்ல.

“எனது குடிமக்கள் அரிசி பற்றாக்குறை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் படும் கஷ்டங்களை நான் கேட்டு புரிந்துகொள்கிறேன்” என்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.

மக்களின் வாழக்கைச் சுமையைக் குறைக்க உதவும் வகையில், சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளை (YSIJ) மூலம் இந்த உதவிகளை வழங்கியுள்ளார்.

ஜோகூர் போலீஸ் படை மற்றும் 7வது ராணுவப் படையைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 10 மாவட்டங்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு அரிசிப் பைகள் வழங்கப்பட உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஜோகூர் காவல்துறைக்கு 3,990 அரிசி மூட்டைகள் கிடைத்தன, அதே நேரத்தில் 7 வது இராணுவப் படை பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களுக்காக 3,000 மூட்டைகள் கிடைக்கப்பெற்றன.

மேலும் ஜோகூர் பாரு (580 அரிசி மூட்டைகள் ),மூவார் (340 மூட்டைகள்), பத்து பஹாட் (432 மூட்டைகள்), சிகாமாட் (305 மூட்டைகள்), குளுவாங் (71 மூட்டைகள்), பொந்தியான் (264 மூட்டைகள்), கோத்தா திங்கி (477 மூட்டைகள்), மெர்சிங் (477 மூட்டைகள்), மெர்ஸிங் ( 149 மூட்டைகள்), தாங்காக் (141 மூட்டைகள்), மற்றும் கூ லாய் (251மூட்டைகள்) வீதமும் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here