ஷா ஆலம்:
தற்போதுள்ள ஒற்றுமை அரசாங்கம் ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் இஸ்லாமிய போதனைகள் இரண்டையும் மீறுவதாக பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று ஷா ஆலமில் நடைபெற்ற பாஸின் 69வது ஆண்டுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகம் கூட்டாட்சி உட்பட அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் ஹாடி குற்றம் சாட்டினார்.
மேலும் “ஒற்றுமை அரசாங்கம் சந்தேகத்திற்குரிய பின்னணியைக் கொண்ட நபர்களால் ஆனது. உண்மையில், இந்த அரசாங்கம் முன்னாள் குற்றவாளிகள், நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. இதனை ஒரு ஒற்றுமை அரசாங்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள்”.
“இந்த ஒற்றுமை அரசாங்கத்தினர் ஜனநாயகம் மற்றும் இஸ்லாத்தின் கொள்கைகளை அப்பட்டமாக புறக்கணிக்கிறார்கள்” என்று ஹாடிஅவாங் தனது உரையில் கூறினார்.





















