QUEST அனைத்துலக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா.

நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்விக் கூடங்களுள் ஒன்றான QUEST INTERNATIONAL UNIVERSITY (QIU) பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 500 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

அதிலும் QI குழுமத்தின் முழு நேரப் பணியாளர்களான ஜோனி நாகரத்தினம், ஸ்ரீகாந்த் தியாகராஜன் ஆகிய இருவரும் இம்முறை பட்டமளிப்பு விழாவில் MPA பாடத்திட்டத்தில் பட்டம் பெற்றுள்ளனர்.

முழு நேரமாகப் பணியாற்றிக் கொண்டே உயர்கல்வியில் பட்டம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இந்நிலையில் எனது வேலையில் நிறைய பயணம் செய்ய வேண்டும். எனவே என் வசதிக்கேற்ற கால அட்டவணை  யின்படி நான் MPA பாடம் பயில முனைந்தேன் என்று இந்நிறுவனத்தில் வர்த்தகத் தீர்வுப் பிரிவுத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.

குறிப்பாக என் வழிகாட்டியாக விளங்கிய பத்மா சாந்தினினுக்கு நன்றி கூற வேண்டும். எனது பயண அட்டவ ணையில் அவர் இல்லையென்றால் நான் இந்தப் பாடத்தை முழு மையாகப் பயி ன்றிருக்க முடி யாது எனவும் ஸ்ரீகாந்த் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜோனி நாகரத்தினம், இந்தப் பல்கலை க்கழகத்தில் MPA கல்வி பயில்வ தற்கு நான் எடுத்த முடிவு மிகவும் ஆக்கப் பூர்வமானதாகும்.

நான் எம்பிஏ கல்வி பயில வேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணம் கொண்டி ருந்தேன். ஆனால் காலச் சுழல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. பின்னர் நம்முடைய QIU பல்கலைக்க ழகத்தில் நமக்கு ஏற்ற – வங்திக்கேற்ப பாடத் திட்டம் போதிக்கப் படுவதைத் தெரிந்து கொண்டேன். எனவே இந்த வாய்ப்பைத் தவற விட விரும்பவில்லை என்றார் அவர்.

இதனிடையே இந்தப் பல்கலைக்கழகத்தில் சைக்கலோஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவி லிம் யோங் ஸின். மேலும் இதோடு நிறுத்தி விடாமல் முதுகலைப் பட்டம் பயில்வதற்கு அவர் முனைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here